நோக்கு மற்றும் பணி

நோக்கு
இலங்கையன் என்ற அடையாளத்தைப் பேணுதல் சகல பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்தல் சமச்சீரான ஒரு சமூகத்தை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக யாவருக்கும்   கருத்துள்ள  கல்வியை வழங்குதல்.

பணி
சமூகத்தின் மாறிவரும் தேவைகளைக் கருத்திற் கொண்ட முறையிலான கல்வி முறையை உருவாக்குவதற்கு ஏற்ற தேசிய கல்விக் கொள்கையை விருத்தி செய்துஇ வளமான இலங்கையைப் பரிணமிக்கச் செய்தல்.

இறுதியாக :  2010-07-30 
தேசிய கல்வி ஆணைக்குழு

குறிக்கோள்


கல்விக் கொள்கையைப் பொறுத்த வரையில் அதன் சகல அம்சங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை வழங்குதல். இதன் நோக்கம் கல்விக் கொள்கையில் தொடர்ச்சியை உறுதி செய்தலும் சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையைச் செம்மைப்படுத்தலுமாகும். இதில் கல்விக் கொள்கை திட்டம் அல்லது திட்டங்கள் என்பவற்றை உடனடியாகப் பரிசீலனை செய்தல் விரிவான ஒரு தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளைச் செய்தல் என்பன அடங்கும்.
நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை திட்டம் அல்லது திட்டங்களைக் காலத்துக்குக் காலம் பரிசீலனை செய்தலும் பகுப்பாய்வு செய்தலும் அத்துடன் தேவையானவிடத்து அத்தகைய கொள்கைகள் திட்டம் அல்லது திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதிக்குப் பரிந்துலை செய்தல்.
ஜனாதிபதி தேசிய ஆணைக்குழுவின் ஆலோசனைக்கெனத் தரும் கல்வி தொடர்பான வேறு ஏதேனும் விடயங்கள் பற்றி அவருக்கு ஆலோசனை வழங்குதல்.
 

செய்திகளும் நிகழ்வுகளும்

பதிப்புரிமை © 2009 தேசிய கல்வி ஆணைக்குழு. முழுப் பதிப்புரிமை உடையது.
நிறைவூட்டும் இணைப்பாக்கம் :
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்